வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:48 IST)

சிக்கலில் ப.சிதம்பரம்! முன் ஜாமீன் தள்ளுபடி; சிபிஐ காவல் நீட்டிப்பு...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு வரும் 30 ஆம் தேதி வரை சிபிஐ காவல் நீடிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.  
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். மேலும் ப.சிதம்பரம் காவலை நீடிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்தது. 
இதனிடையே சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்கு பின்னர், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.  
 
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (வரும் 30 ஆம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.