Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் உள்நாட்டு விமானங்களும் ரத்து: அதிரடி அறிவிப்பு

Updated: திங்கள், 23 மார்ச் 2020 (17:17 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசும் நாடு முழுவதும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வர்த்தக ரீதியில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஏற்கனவே இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் தரையிறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை இரவுக்கு பின் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு விமானங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

கச்சா எண்ணெய் ஒரு சொட்டு கூட கிடைக்காது!.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!...

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments