1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (09:30 IST)

பத்து நிமிடத்தில் வாங்கலாம் பான் கார்டு! – ஆதார் போதும்!

பான் எண் பெற விண்ணப்பித்து மாத கணக்காக காத்திருக்கும் சிரமத்தை குறைக்க மத்திய அரசு உடனடி பான் எண் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்க மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு எண் அவசியமான ஒன்றாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்கு பிறகே பான் எண் கிடைக்கும் என்பதால் பலர் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஆதார் கார்டு அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பித்த பத்து நிமிடத்தில் இ-பான் கார்டாக அதை தரவிறக்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த நடைமுறை நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.