வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:45 IST)

இந்திய நிறுவனம் கண்டுபிடித்த ஸ்மார்ட் கால்குலேட்டர்: வியாபாரிகளுக்கு உதவும் என தகவல்

smart calculator
இந்திய நிறுவனம் கண்டுபிடித்த ஸ்மார்ட் கால்குலேட்டர்: வியாபாரிகளுக்கு உதவும் என தகவல்
வியாபாரிகளுக்கு உதவிடும் வகையில் இந்திய நிறுவனம் ஸ்மார்ட் கால்குலேட்டரை கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வைஃபை மூலம் இயங்கும் ஸ்மார்ட் கால்குலேட்டரை கண்டு பிடித்துள்ளது. இந்த கால்குலேட்டர் பெரும்பாலும் வியாபார்களுக்கு உதவியாக இருக்கும் என நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்
 
 மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டூஹெண்ட் என்ற நிறுவனம்தான் இந்த கால்குலேட்டரை தயாரித்துள்ளது என்பது இந்நிறுவனத்தின் இணை இயக்குனர்களான பிரவீன்,  சத்யம் மற்றும் சண்முகவடிவேல் ஆகியோர் இணைந்து இந்த ஸ்மார்ட் கால்குலேட்டரை  கண்டு பிடித்தனர் 
 
காய்கறி கடையில் பணிபுரியும் பெண்கள் உள்பட பலர் இந்த ஸ்மார்ட் கால்குலேட்டரை மிக எளிதில் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் 50 லட்சம் கணக்குகளை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் இதில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த கால்குலேட்டர் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது 
 
Edited by Siva