திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:39 IST)

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை எவ்வளவு? லீக் ஆன தகவல்

jio phone
ஜியோ நிறுவனத்தின் 4ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் நிறுவனம் தீபாவளி முதல் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஜியோ அறிவித்து உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த போனின் விலை இந்தியாவில் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
6.5 இன்ச் IPS LCD 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
 
குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர்
 
4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
 
13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா 
 
5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி