வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (12:29 IST)

இந்திய மக்கள் 6.55 மணி நேரம் தான் இதை செய்கிறார்களாம்: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் சராசரியாக, ஒரு நாளைக்கு 6.55 மணி நேரம் மட்டும் உறங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.


 
 
தூக்கம் சம்பந்தமாக ஃபிட்பிட் என்ற உடல்நல ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 
 
இந்த ஆய்வில் உலக அளவில் மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த மக்கள் மிகக் குறைவான நேரமே உறங்குவதாக தெரியவந்துள்ளது.
 
இதில், ஜப்பான் நாட்டு மக்களே முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 6.35 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கடுத்தப்படியாக, இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது. 
 
நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டின் மக்கள் சராசரியாக, நாள்தோறும் 7 மணிநேரத்திற்கும் மேலாக உறங்குகின்றனர். 
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினரே, உலக அளவில், நீண்ட நேரம் அதாவது, 8 மணிநேரத்திற்கும் மேலாக, சராசரி உறக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.