செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (17:51 IST)

இந்திய ரூபாய் மதிப்பு வலிமையாகவே உள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 80 என வலுவிழந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு வலுவாகவே இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு ரஷ்யா உக்ரைன் போர் தான் காரணம் என்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகள் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் பிரிட்டன் பவுண்ட், ஜப்பானிய யென், யூரோ போன்ற கரன்சிகளைவிட இந்திய ரூபாய் வலிமையாக உள்ளது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.