செவ்வாய், 18 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 மார்ச் 2025 (18:56 IST)

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

இந்திய பங்குச் சந்தைகளின் நேர்மறை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் காரணமாக, இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக வர்த்தகம் முடிந்தது.
 
அமெரிக்காவின் பொருளாதார டேட்டாக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால், டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதேசமயம், இந்திய ரூபாய் உள்பட ஆசிய நாணயங்கள் வலுவாக செயல்பட்டதாலும் இந்திய ரூபாய்க்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும், கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக ரூபாயின் லாபம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
 
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ரூ.86.71 என்ற மதிப்பில் இன்று வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது ரூ.86.54 வரை உயர்ந்தாலும், குறைந்தபட்சமாக ரூ.86.78 ஐ தொட்டது. இறுதியில், 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக நிலைபெற்றது.
 
நேற்று  ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆகவும், கடந்த வியாழக்கிழமை 17 காசுகள் உயர்ந்து ரூ.87.05 ஆக முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva