ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்: பாகிஸ்தான் மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை..!
ஈரான் நாட்டின் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில் அதில் சிக்கி இருந்த 23 பாகிஸ்தான் மாலுமிகளை இந்திய கடற்படை அதிரடியாக மீட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடுக்கடலில் ஈரான் கப்பலை கடற்கொள்ளையர்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி கடத்திய நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட இந்திய அரசு உடனடியாக அரபிக் கடலில் போர்க்கப்பல்களை அனுப்பி இருந்தது
அந்த போர் கப்பலில் இருந்த இந்திய கடற்படை வீரர்கள் கடல்கடற்கொள்ளையர்களிடம் போராடி ஈரானிய கப்பலை மீட்டனர். அதிலிருந்த 23 பாகிஸ்தான் மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கடல் கொள்ளையர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் கடற்கொள்ளையர்கள் கடத்திய கப்பலை இந்திய கடற்படையினர் சோதனை செய்த நிலையில் அது வெறும் மீன்பிடி கப்பல் தான் என்று உறுதி செய்யப்பட்டது
ஏற்கனவே கடற்கொள்ளையர்களை கடத்திய கப்பலை வழிமறித்து 40 மணி நேரம் போராடி அனைத்து கடற்கொள்ளையர்களையும் இம்மாத தொடக்கத்தில் இந்திய கப்பல் படை கைது செய்தது என்பது தெரிந்தது.
Edited by Mahendran