வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:29 IST)

தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை

தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு நாட்டின் கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையர்களாலும் அடிக்கடி தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது  நடந்து வருகிறது.

இப்படி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்களை விடுவிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  இன்று தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு நாட்டின்  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.