செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:02 IST)

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! – நிறைவேறியது மசோதா!

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்கள் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா மீதான ஒப்புதலுக்காக மாநிலங்களவை வந்த நிலையில் 84 ஆதரவு வாக்குகளுடன் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்கள் தன்னாட்சி துறைமுகங்களாக அறிவிக்கப்படும் நிலையில், இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.