வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (09:09 IST)

தாக்கினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்! – இந்தியா எச்சரிக்கை

இந்தியா மீது தாக்குதல் நடத்த மற்ற நாடுகள் முயற்சித்தால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் 12வது தெற்காசிய மாநாடு நடைபெற்றது. ’இட்சா’ எனப்படும் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் அமைப்பின் இந்த மாநாட்டில் மற்ற நாடுகளுடனான உறவுநிலை மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட ஆசிய நாடுகளின் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் ”இந்த பிராந்தியத்தில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த பயங்கரவாத நாடுகள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. ஆனால் ஒரு நாடு மட்டும் பயங்கரவாதத்தை தனது அரசியலின் ஒரு அங்கமாகவே விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த நாடுதான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது. இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதை சர்வதேச அளவில் எடுத்து செல்ல உள்ளோம். பயங்கரவாதத்தை இந்தியா விரும்புவதில்லை. ஆனால் எந்த நாடாவது இந்தியா மீது பயங்கரவாதத்தை திணிக்க விரும்பினால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்” என பேசியுள்ளார்.

அவர் பாகிஸ்தானைதான் குறிப்பிடாமல் மறைமுகமாக எச்சரிக்கிறார் என பேசிக் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான் சமீப காலமாக தங்களது ராணுவ ஆயுதங்களை மேம்படுத்தி வரும் நிலையில் ராஜாங்க மந்திரி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.