இந்திய போர் விமானங்களை இயக்கும் ஆற்றல் மிக்க பெண்மணிகள்
இந்திய போர் விமானங்களை இயக்கும் ஆற்றல் மிக்க பெண்மணிகள்
இந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை பெண் விமானிகள் இயக்க உள்ளனர்.
இந்திய விமானப்படையில், சாதாரண ரக விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போர் விமானங்களை இயக்க 6 இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இறுதியாக பாவனா காந்த், அவானி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, ஐதராபாத் துண்டிக்கலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் போர் விமானி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் தங்களது திறமையை நிரூபித்து மாபெரும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதனையடுத்து, இவர்களை முறைப்படி விமானப் படையில் இணைத்துக் கொண்டனர்.