அமெரிக்காவை காப்பியடித்த இந்தியா! – செல்போன் பயன்படுத்த தடை!
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும் கப்பற்படை வீரர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக எதிரிநாட்டு உளவு அமைப்புகளுக்கு இந்தியா குறித்த தகவல்களை கசிய விட்டதாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
அமெரிக்காவிலும் கடற்படை வீரர்கள் டிக்டாக் செயலியில் அதிகம் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். சீன செயலியான டிக்டாக்கை அமெரிக்க வீரர்கள் பயன்படுத்துவதால் ரகசியங்களை சீனா திருடிவிட வாய்ப்புள்ளதாக கருதிய அமெரிக்க அரசு கடற்படை வீரர்கள் டிக்டாக் பயன்படுத்த தடை விதித்தது.
அதே போன்றதொரு நடைமுறையை தற்போது இந்திய கடற்படையும் செய்துள்ளது. அதன்படி இந்திய கடற்படை வீரர்கள் டிக்டாக், ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்த கூடாது என கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பல்களில் பணியில் இருக்கும்போது ஸ்மார் போன்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இல்லாத நேரங்கள், பணி நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.