கொரோனாவால் இந்தியாவில் 5வது பலி: 206 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை இத்தாலியர் ஒருவர் இறப்பையும் சேர்த்து 5 ஆக உயர்ந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 150 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை, வைரஸ் பரவும் வேகம் போன்றவற்றை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அரசுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.