உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடான இந்தியா !
உலகிலேயே அதிக விலைக்கு கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 தொடங்கி ரூ.1500 வரை மாநிலம் தோறும், மருத்துவமனைகள் தோறும் விருப்பப்பட்ட விலையை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது.
ஆம், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு அதிகரித்து இருப்பதால், உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிக்கான செலவை அரசே ஏற்றுள்ள நிலையில் இந்தியாவும் அவ்வாறு செய்யாமல் தனியாருக்கு இதனை ஒப்படைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.