செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (07:54 IST)

80 தொகுதியில் காங்கிரசுக்கு 11 தொகுதிதானா? உபியிலும் உடைகிறதா இந்தியா கூட்டணி?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் அவற்றில் 11 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி ஜனதா கட்சி ஒதுக்கிருப்பதை அடுத்து காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா  ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடைந்து விட்ட நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தலின் போது இந்தியா கூட்டணி கட்சிகளை மதிக்காமல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதை அடுத்து தற்போது மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன

இந்தியா கூட்டணியில் உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் என்றாலும் அந்த கட்சிக்கு மதிப்பு கொடுத்து போதுமான தொகுதிகள் தர மறுத்து வருகின்றன. இந்த நிலையில் 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறும்  11 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளதை அடுத்து மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ்  பிரமுகர்கள் உபியில் தனித்து நின்று நமது வலிமையை நிரூபிப்போம் என்று கூறி வருவதால் இந்தியா கூட்டணியை உபியிலும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Edited by Siva