1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:56 IST)

துண்டு துண்டாக சிதறிய இந்தியா கூட்டணி.. 2024 தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கூட்டணி துண்டு துண்டாக சிதறி வருவதை அடுத்து வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்  
 
இந்தியா முழுவதும் செல்வாக்கு உள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே. எனவே காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது 
 
ஆனால் காங்கிரசை தங்கள் மாநிலத்தில் வளர விடுவது தங்கள் மாநில ஆட்சிக்கு ஆபத்து என கூட்டணி கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் காங்கிரசை தங்கள் மாநிலங்களில் வளர விடுவது ஆபத்து என்று நினைப்பதால் தான் அவர்கள் தனித்து போட்டியிடுகின்றனர். 
 
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை தமிழகம் தவற மற்ற அனைத்து மாநிலங்களிலும் கருத்து வேறுபாடு இருப்பதால் இந்த கூட்டணி தேர்தல் வரை கூட இருக்காது என்று தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே பாஜக வரும் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva