உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட ராணுவம் – பரபரப்பு வீடியோ
காஷ்மீரில் மீன் பிடிக்க ஆற்றுக்குள் சென்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட நபர்களை இந்திய ராணுவம் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
காஷ்மீரில் உள்ள தாவி ஆற்றுப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் சென்றுள்ளனர். நடு ஆற்றில் உள்ள கட்டையின் மீது ஏறி அமர்ந்து மீன் பிடிக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆற்றில் வெள்ளம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. கரையேற வழியில்லாமல் நடு ஆற்றிலேயே சிக்கி கொண்டனர் நால்வரும்! இதை அந்த வழியாக பாலத்தில் சென்றவர்கள் பார்த்து காவல் துறைக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர்.
இந்த தகவல் கேள்விப்பட்டு உடனடியாக அவர்களை மீட்க சம்பவ இடத்துக்கு விரைந்தது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர். கயிற்றை போட்டு ஆற்றில் உள்ள கட்டையில் இறங்கிய ராணுவ வீரர் நால்வரையும், இருவர் இருவராக பிரித்து ஹெலிகாப்டரில் அனுப்பி காப்பாற்றினார்.
இதை அங்கு சுற்றியிருந்த பலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரத்தையும், மனிதாபிமானத்தையும் பலரும் புகழ்ந்து இதை ஷேர் செய்து வருகின்றனர்.