கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 என அதிகரிப்பு.. தமிழகத்தில் 35 லட்சம் பேர் பயனடைவர்..!
கேஸ் சிலிண்டர் மானியம் 200 ரூபாய் என அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வரும் என்பதும் பிரதி மாதம் ஒன்றாம் தேதி இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்பதும் தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து சென்னையில் தற்போது 1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் பயனாளர்களுக்கு ரூபாய் 200 மானியம் என அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் 35 லட்சம் பேர் ரூபாய் 200 மானியம் பெற்று பயன் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran