வாகன விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
உத்திரபிரேதச மாநிலத்தில் கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரேதச மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர், அப்போது, சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியும், அவர்களது காரும் சாம்லி மாவட்டத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொருங்கியதால் அதில் பயணம் செய்த 4 பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.