புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (11:15 IST)

கோவிஷீல்டு, கோவாக்சின் கலந்து போட்டால்..?? – ஐசிஎம்ஆர் அறிக்கை!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஎம்ஆர் புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் கொவாக்சின் மற்றும் கோவிஷீல்டை கலந்து செலுத்தினால் அது கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபோல இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.