பசுவை கொல்பவர்களின் கை கால்களை உடைப்பேன். உ.பி. எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததில் இருந்தே சிறுபான்மையினர் அச்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே சட்டவிரோதமாக செயல்படும் மாட்டிறைச்சி கடைகள், மூடப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பசுவை மதிக்காதவர்கள், கொல்பவர்களின் கை, கால்களை உடைப்பேன் என சர்ச்சைக்க்ரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி மாநிலத்தை சேர்ந்த காட்டாயுலி என்ற தொகுதியின் எம்.எல்.ஏ விக்ரம் சாய்னி என்பவர் சமீபத்தில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய விக்ரம் சாய்னி, பசுவை தாயாக நினைக்காதவர்கள், பசுவை கொல்பவர்களின் கைகள் மற்றும் கால்களை நானே உடைப்பேன் என சத்தியம் செய்கின்றேன் என்று கூறினார்.
விக்ரம் சாய்னியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பாரதிய ஜனதா கட்சியை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் சாய்னி கடந்த 2013ஆம் ஆண்டுஜ்நடந்த முசாப்பர்நகர் கலவரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.