வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (07:56 IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் நிலையில் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே அவர்கள் பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு, '‘நான் ஒரு  மத்திய அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அமைச்சர். பதவியை இழந்தால் நான் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறினர்