திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (12:55 IST)

நான் ஒரு பெருமைமிக்க இந்து.. மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்: நடிகை கங்கனா ரனாவத்..!

நடிகை கங்கனா ரனாவத் மாட்டு இறைச்சி சாப்பிடுவார் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதற்கு ’நான் ஒரு பெருமைமிக்க இந்து, மாட்டிறைச்சி உள்பட எந்தவித இறைச்சியையும் சாப்பிட்டதில்லை என்று கங்கனா ரனாவத் மறுப்பு தெரிவித்துள்ளார் 
 
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பிரமுகர் விஜய் வடேட்டிவார் என்பவர் கங்கனா ரனாவத் ஒருமுறை தனது எக்ஸ் தளத்தில் தனக்கு மாட்டு இறைச்சி பிடிக்கும் என்றும் அதை சாப்பிட்டு உள்ளேன் என்றும் குறிப்பிட்டார் என்று பேசினார் 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கங்கனா ரனாவத், மாட்டிறைச்சி உள்பட எந்தவித இறைச்சியையும் நான் சாப்பிட்டதில்லை என்றும் என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் சமீபத்தில் கங்கனா ரனாவத் சுதந்திர சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran