செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (09:33 IST)

விலைமாதும் மரியாதைக்குரியவர் தான்: கங்கனா பதிவை அடுத்து சுப்ரியா ஸ்ரீநேத் நீக்கிய பதிவு..!

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது தேர்வு குறித்து காங்கிரஸ் பெண் பிரபலம் சுப்ரியா ஸ்ரீநேத் என்பவர் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை செய்திருந்தார்
 
அந்த பதிவில்  கங்கனா ரனாவத் விலைமாது கேரக்டரில் ஒரு திரைப்படத்தில் நடித்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார் 
 
கடந்த 20 ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில் விலைமாது தொடங்கி புரட்சி தலைவி வரை பல கேரக்டர்களில் அனைத்து விதமான பெண் கேரக்டர்களின் நடித்துள்ளேன். விலைமாது உள்பட ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார் 
இதை அடுத்து சுப்ரியா தனது சமூக வலைதளத்தில் தன்னுடைய சமூக வலைதளம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பதிவுகளை தான் செய்யவில்லை என்றும் இருப்பினும் அவை நீக்கப்பட்டு விட்டன என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Siva