1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (18:39 IST)

இரண்டு மாதத்திற்கு பிச்சை எடுக்க லீவ்: ஐதராபாத் அரசு!!

ஐதராபாத் நகரத்தில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐதராபாத் பிச்சைகாரர்கள் இல்லாத நகரமாக மாறியுள்ளது.


 
 
ஐதராபாத் நகரில் வரும் 28 முதல் தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப், மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்கள் ஐதராபாத் வரவுள்ளனர்.
 
இந்நிலையில், தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் அதிக பிரச்சனை ஏற்படுவதால் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 6000 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.