செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (12:10 IST)

செல்போனிற்கு அடிமையாகிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

வீட்டு வேலையை செய்யாமல் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்த மனைவியை, அவரது கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்தவர் சுராஜித்பால். இவரது மனைவி தும்பா பால் (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தும்பாபால் செல்போனிற்கு அடிமையாகி எந்நேரமும் வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவதில்  ஆர்வமாக இருந்து வந்தார். இதனால் அவர் வீட்டு வேலைகளை கூட சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. மனைவியின் நடவடிக்கையை பலமுறை சுராஜித்பால் கண்டித்த போதிலும், அதனை தும்பா பால் கண்டு கொள்ளவில்லை.
 
சம்பவத்தன்று மனைவி பெல்போன் பயன்படுத்துவதை பார்த்து, சுராஜித்பால் அவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில்  ஆத்திரமடைந்த சுராஜித்பால், தும்பா பாலை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார். கல்லூரிக்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பியபோது தாயார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தும்பா பாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவாக இருந்த சுராஜித்பாலை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.