1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (13:32 IST)

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி : 7 துண்டுகளாக வெட்டி வீசி எறிந்த கணவன்

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை அவரின் கணவர் துண்டு துண்டாக வெட்டி வீசி எறிந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பீகார் மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் சஜத் அலி அன்சாரி. படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த  அவருக்கு செல்போன் மூலம் ஜூகி என்கிற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் பின் அது காதலாக மாறி, கடந்த 2011ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், சரியான வேலை இல்லாமல் அவதிப்பட்ட அன்சாரி, வேலை தேடி டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஆனால், எந்த பணியிலும் அன்சாரி நீண்ட நாள் நீடிக்கவில்லை. இதனால் அவரின் குடும்பத்தில் வறுமையில் சிக்கியது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சரியாக வீட்டிற்கு வருவதையும் அன்சாரி தவிர்த்து வந்தார். இதனால், ஜூகிக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஜூகியை அன்சாரி அடித்தே கொலை செய்துள்ளார்.
 
அதன்பின், நெருங்கிய உறவினர்கள் இருவரின் உதவியுடன் ஜூகியின் உடலை 7 துண்டுகளாக வெட்டி 7 அட்டைப் பெட்டிகளில் அடைத்து ஒரு இடத்தில் வீசிவிட்டனர். அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசவே இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து அன்சாரி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.