புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (08:12 IST)

டெல்லி மத மாநாடு: எந்தெந்த மாநிலத்தில் இருந்து எத்தனை பேர்?

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லியில் மத வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் எந்தெந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து மத போதகர்கள் கலந்து கொண்ட இந்த மத மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலவாரியாக கலந்து கொண்டவர்கள் குறித்த தகவல்
 
தமிழகம்த்தில் 501 பேர்களும், அஸ்ஸாமிலிருந்து 216 பேர்களும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 156 பேர்களும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேர்களும், மத்திய பிரதேசத்திலிருந்து 107 பேர்களும், பீகாரில் இருந்து 86 பேர்களும், தெலுங்கானாவிலிருந்து 55 பேர்களும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேர்களும், கர்நாடகாவிலிருந்து 45 பேர்களும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேர்களும், அந்தமானிலிருந்து 21 பேர்களும், ராஜஸ்தானிலிருந்து 19 பேர்களும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேர்களும், பஞ்சாபிலிருந்து 9 பேர்களும், மேகாலயாவிலிருந்து 5 பேர்களும், கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலத்தின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்து தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்தால் உடனடியாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
ஏற்கனவே இதுபோன்ற ஒரு மாநாடு மலேசியாவில் நடந்ததாகவும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1300 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது