திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:32 IST)

வெளிநாட்டிலிருந்து வந்தால் வீட்டுத் தனிமை கட்டாயம்!

வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் அனைவரும் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,007 ஆக பதிவாகியுள்ளன. இதில் 1,199 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.
 
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் அனைவரும் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. 7 நாள் வீட்டுத் தனிமைக்கு பின் 8வது நாள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.