1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (21:53 IST)

உத்தரகாண்டில் பெய்த பேய் மழைக்கு 12 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.


 

 
இன்று அதிகாலை, உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்தில் மேகம் வெடித்துச் சிதறி, பலத்த மழை பெய்தது. 50 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த  கனமழை 100 மில்லிமீட்டர் அளவு பதிவாகியிருந்தது. 
 
இதன் காரணமாக, சிங்காலி, பத்தாகோட், ஓக்லாம் தால் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன. பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதேபோல் சமோலி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக  8 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது
 
இன்று மாலை நிலவரப்படி 12 பேர் பலியானதாகவும், 17 பேர் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த இயற்கை பேரிடர் குறித்து தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர். 
 
அவர்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.