திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:25 IST)

கேரளாவை அடுத்து கேதார்நாத்தில் பயங்கர நிலச்சரிவ்வு.. 200 யாத்ரீகர்களின் நிலை என்ன?

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 275 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அடுத்ததாக கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு சென்ற 200 யாத்ரீகர்கள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
கேதார்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் கன மழை பெய்ததில் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் படை காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணியை களத்தில் இருந்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கேதார்நாத்தில்  150 முதல் 200 யாத்ரீகர்கள் சிக்கி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கேதார்நாத்தில்  மேக வெடிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கேதார்நாத் நடைபாதை மூடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பு தகவல்களும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran