புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (08:33 IST)

மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்… வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை!

ஆந்திராவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை மெட்ரோ ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நரசா ரெட்டி என்ற 45 வயது நபர் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவரின் இதயம் அனுப்பப் பட வேண்டி இருந்தது.

ஆனால் போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் இதயத்தை எடுத்துச் செல்வது முடியாத காரியம் என்பதால், மெட்ரோ ரயிலில் இதயத்தை எடுத்துச் செல்ல மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாரிடமும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் சம்மதம் தெரிவித்த பின் வெற்றிகரமாக இதயத்தை எடுத்துச் சென்று மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.