திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (14:27 IST)

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு: உயிரை மீட்ட மருத்துவர்!

Flight
நடுவானில் விமான பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
 
பிரிட்டனில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு  திடீரென நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த நபர் உயிருக்கு போராடினார்.
 
இந்த நிலையில் அவரது உயிரை மருத்துவர் விஸ்வராஜ் என்பவர் அதே விமானத்தில் பயணம் செய்த நிலையில் காப்பாற்றியுள்ளார். 43 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு முதலில் மாரடைப்பு வந்ததும் விஸ்வராஜ் முதல் உதவி செய்து அவரை காப்பாற்றினார்.
 
அதன்பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அதே நபருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து 5 மணி நேரம் போராடி அவரை அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதனை அடுத்து அந்த மருத்துவருக்கு சகபயணிகள் பாராட்டு தெரிவித்தனர்
 
Edited by Mahendran