புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:50 IST)

பேஸ்புக் பெண்ணால் வந்த சோதனை ?

மத்திய பிரதேசத்தை சேர்ந்த  அச்சுதானந்த் மிஸ்ரா என்பவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் இந்திய  எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மிஸ்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணுடன் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிவந்த அச்சுதானந்த் ராணுவ பயிற்சி மையங்கள், ராணுவ பாதுகாப்பு முறைகள் , தேசிய பாதுகாப்பு படை முகாம்கள்  அவற்றின் புகைப்படம் போன்றவற்றை அவருடன் பகிர்ந்துள்ளார்.

அந்த பெண்ணின் அலைபேசி எண்ணானது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது எண்ணை பாகிஸ்தான் நண்பர் என்று தன் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் போலீஸார் அச்சுதானந்தை அதிகார்வ பூர்வ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்த போது  அவர் பாகிஸ்தானுக்கு  பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை தெரிவித்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரித்த போது மிஸ்ரா கூறியதாவது: ”பேஸ்புக்கின் மூலமாக ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் என்று தன்னை அறிமுகம் கொண்ட  பிறகு நான் அவருக்கு இந்த ரகசியங்களை தெரிவித்தேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.”

இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் பேஸ்புக் மூலமாக இந்திய அதிகாரிகள் மற்றும் மக்களிடம் நட்பு கொண்டு ரகசியங்களை பெற்று வருவதாக பயங்கரவாத தடுப்பு படையினர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகிறது.