ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (22:34 IST)

பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்ததா?? ஆய்வில் தகவல்

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது.

அப்போது, சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, வேளாண் சட்டங்கள் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் அதிகரித்துவரும் கொரொனா இரண்டாவது அலையின்போது, பிரதமர் மோடியின் செல்வாக்கு  13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நடுத்தர மக்களின் குடும்பவருமானம் குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. அடுத்த தேர்தல் 2024 ஆம் ஆண்டு வந்தாலும் கூட கடந்த 2019 லிருந்து 2021 ஜனவரி மாதம்வரை பிரதமர் மோடியின் மீதிருந்த  80% செல்வாக்கிலிருந்து தற்போது 13% சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.