Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பட்டேலுக்கு Y பிரிவு பாதுகாப்பு: பாஜக அச்சுருத்தல் காரணமா??

Updated: வெள்ளி, 24 நவம்பர் 2017 (21:42 IST)
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
 
கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் துணையாக இருந்த பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜக-வை எதிர்த்து வருகின்றனர்.
 
இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. பட்டேல் சமூகத்தினரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்று கொண்டது. அதாவது, பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் பட்டேல் தெரிவித்தார். 
 
இந்த அறிவிப்புக்கு பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு நாடகம் ஆடுவதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், ஹர்திக் பட்டேலுக்கு வொய் பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது குஜராத் மாநில போலீசார் பாதுகாப்பு அளித்துவரும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 
ஹர்திக்கின் உயிருக்கு ஆபத்து என்று மத்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள்.. கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்..

விஜய் டிவியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி... நடுவர்கள் ஓவியா, ஆரி, ராஜூ..

கோவில்களில் இனி செல்போன் அனுமதி கிடையாது.. தனி கவுன்டர்கள் அமைப்பு.. அமைச்சர் ரமேஷ்..

இளைஞர்கள் உரிமைக்காக போராடலாம், ஆனால் அமைதியாக போராடுங்கள்: ராகுல் காந்தி

நடுவானில் திடீரென 300 அடி உயரம் கீழே சரிந்த டெல்லி வந்த விமானம்.. போதையில் இருந்தாரா பைலட்?

அடுத்த கட்டுரையில்
Show comments