இந்தியாவில் பருவமடைந்த பெண்களில் பாதி பேருக்கு இந்த நோய் இருக்காம்!
இந்தியாவில் பருவமடைந்த பெண்களில் பாதிபேருக்கு இரத்த சோகை நோய் இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கின்றன. சமீபத்திய உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையில் இதியாவில் பருவமடைந்த பெண்களில் 48.1 சதவீதம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், செனகல் நாட்டு வயதுக்கு வந்த பெண்களில் 57.5 சதவீத பெண்களும், நைஜீரியவில் 48.5 சதவீத பெண்களும், கினி நாட்டில் 48.4 சதவீத பெண்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடுகளில், பாகிஸ்தானில் 51.1 சதவிகிதம் பெண்களும், உஸ்பெகிஸ்தானில் 51.7 சதவிகிதம் பெண்களும், இந்தியாவில் 48.1 சதவீத பெண்களும், வங்க தேச நாட்டில் 43.5 சதவிகித பெண்களும், பூடானில் 43.7 சதவிகித பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மிக குறைந்த அளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 11.9 சதவிகித பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.