வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:23 IST)

டெல்லியில் மாபெரும் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
விவசாயிகளின் கோரிக்கைகள்:
 
எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும்.
 
 நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
லக்கிம்பூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் அஜய்மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடியபோது, உயிரிழந்த விவசாயிகளுக்கு  நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி., ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.