Daily Horoscope
✕

கணிதம், இயற்பியல் இல்லாவிட்டாலும் பொறியியல் படிப்பு அட்மிசன்! – புதிய நடைமுறை அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (11:13 IST)
பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது

இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புகள் மாணவர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களை கற்றிருப்பது அவசியமாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விதிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றியமைத்துள்ளது.

அதன்படி 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிரியல், வேளாண்மை, பயோ டெக்னாலஜி, வணிகம், தொழிற்கல்வி, மின்னணுவியல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களை படித்திருந்தால் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறையால் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

சென்னை To தென்காசி - தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஒரு வசதி.. JEE, NEET பயிற்சிக்கு பள்ளியிலேயே ஹை-டெக் லேப்!

ஹோட்டல் ஸ்டைலில் இனி பள்ளி குழந்தைகளுக்குக் காலை உணவு! முதலமைச்சர் விஜய் திட்டம்...

தமிழகம் முழுவதும் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பு.. முதல்வர் விஜய் உத்தரவு...

160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments