1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (13:37 IST)

ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல்..! புதுச்சேரி பறக்கும் படை அதிரடி..!!

Car Seized
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு  உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர காண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த மினிவேனை கோரிமேடு எல்லை பகுதி சோதனைச் சாவடியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் நிறுத்தி சோதனை செய்தனர். 
 
அப்போது அலுமினியப் பெட்டிகளில் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைரங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில்  சென்னையில் உள்ள தனியார் தங்க நகை செய்யும் இடத்தில் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் வைரங்கள் புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகை கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதும், ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாதததும் தெரியவந்தது. 

 
இதனையடுத்து  சுமார் 3.5 கோடி ரூபாய்  மதிப்பிலான நகைகள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவற்றை  அரசு கணக்கு மற்றும் கரூவூலத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் நகைகளை திருப்பி கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.