செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2017 (19:18 IST)

ரேகிங் செய்த மருத்துவ மாணவிகள்; ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த கல்லூரி

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங்கா மருத்துவ கல்லூரியில் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 

 
பீகார் மாநிலத்தில் தர்பாங்கா பகுதியில் மருத்துவ கல்லூரி மற்றும் மருவத்துவமனை உள்ளது. இதில் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் ரெகிங் தொடர்பான புகார் அளித்தார். அவரை அங்கு படிக்கும் மூத்த மாணவிகள் கொடுமைபடுத்தி, அடித்து துன்புறுத்தி, மனதளவில் பாதிக்கும் அளவுக்கு ரேகிங் செய்வதாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்து மருத்துவ கவுன்சிலிலும் புகார் பதிவு செய்தார். இதையடுத்து அவரது புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்தியபோது மூத்த மாணவிகள் ரேகிங் செய்தது தெரியவந்தது. கல்லூரி முதல்வர் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து ரேகிங்கில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.