பாஜகவிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நிலை உருவாகியுள்ளது - ராகுல் காந்தி
பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
தேசம் பற்றி எரிந்தாலும், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும் தலித்துகள், சிறுபான்மையினர் உரிமைகள் அச்சுறுத்தப்பட்டாலும் மோடி மீண்டும் பிரதமராவதிலேதான் ஆர்வம் காட்டுகிறார். மோடி ஆட்சியில் அரசியல் சாசனம் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுவிட்டன.
உச்சநீதிமன்றத்தை சீர்குலைத்துவிட்டனர். நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிட்டனர். பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு கல்வியை கொடுப்போம் என்கிற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. இப்போது பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகள் காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என்று கூறியுள்ளார்.