ஜி20 உச்சி மாநாடு தலைவர் பதவியை ஏற்றார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜி-20 உச்சிமாநாடு தலைவர் பதவியை ஏற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
அடுத்த ஆண்டு அதாவது டிசம்பர் 2023 ஆம் ஆண்டு ஜி-20 உச்சிமாநாடு தலைமையை இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இது குறித்து இந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி ஜி 2023ஆம் ஆண்டு ஜி20 தலைமைப் பதவியை இந்தியா கைப்பற்றுவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் என்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி20 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜி-20 உச்சிமாநாடு உலக அளவில் மாற்றத்திற்கான கருவியாக மாற்றுவோம் என்றும் இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
ஜி-20 உச்சி மாநாட்டின் தலைமை பதவியை இந்தியா ஏற்கவுள்ளதை அடுத்து உலக நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Edited by Mahendran