இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளிலும் வசதி!
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் கர்நாடகம் மகாராஷ்டிரம் மத்தியப் பிரதேசம் பீகார் டெல்லி கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பதும் அதில் பிரதமர் உள்பட பல அரசியல் பிரபலங்களும் திரை உலக பிரபலங்களும் தொழிலதிபர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று முதல் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி அரசு மருத்துவமனையில் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் இதுவரை சுமார் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இம்மாதம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது