உத்தரபிரதேசத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி!
உத்தரபிரதேசத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
இந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
இன்று முதல் லக்னோ நகரில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் படிப்படியாக அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது உத்தரபிரதேசத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அது குறித்த அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது