திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (18:28 IST)

பள்ளிகளில் வார விடுமுறை ஞாயிறுக்கு பதில் வெள்ளி: அரசு அதிரடி அறிவிப்பு

holiday
பீகாரில் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஞாயிறு விடுமுறைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பீகாரின் கிழக்கு பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் அதிக அளவில் முஸ்லிம் மக்கள்தொகை உள்ளனர். எனவே இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் மசூதிக்கு செல்வதற்கு வசதியாக அந்த பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டது
 
கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை இருந்து வந்ததாகவும் தற்போது தான் இந்த கோரிக்கையை நிறைவேற்ற உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சில பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது