செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (16:09 IST)

பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை.! குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.!!

france president
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.
 
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
france
இந்நிலையில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஜெய்ப்பூர் வருகை தந்தார். இன்று இரவு டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். நாளை நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.. 

 
கடந்தாண்டு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.