திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (17:23 IST)

வங்கி கணக்குகள் முடக்கம் - காங்கிரஸ் கட்சியின் மனு தள்ளுபடி!

congress
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி  நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது சோனியா காந்தி கூறியதாவது: ''மக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதியை முடக்கியுள்ளது ஜன நாயக விரோத செயலாகும். இந்தச் சவாலான  சூழ்நிலையில், தேர்தல் பிரசாரம் திறம்பட மேற்கொள்ள எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம்.  காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கிறது'' என்று தெரிவித்தார்.
 
அதேபோல் ராகுல்காந்தி, ''இது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் முடக்கம். இது பிரதமர் மோடி மற்றும்  உள்துறை அமைச்சர் ஆகியோரால்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''  என்று குற்றம்சாட்டினர்.
 
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் வருமானத்துறைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.